தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் UGC NET-2023 விண்ணப்ப காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலை 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். OBC, SC, ST, PWD பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது. தேர்வுகள் பிப்., 21 முதல் மார்ச் 10 வரை ஆன்லைனில் நடத்தப்படும். ugcnet.nta.nic.in இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.