விடுமுறை… 14 நாட்கள் செயல்படாது… முக்கிய அறிவிப்பு…!!!

2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை நாட்களாக 15 நாட்கள் அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளுக்கான விடுமுறை நாள் அறிவிக்கப்படும். அதன்படி 2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 26 குடியரசு தினம், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி, மே 14 ஈதல் அல் பிதர், மே 26 புத்த பூர்ணிமா, ஜூலை21 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 19 மகரம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 15 விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, நவம்பர் 4 தீபாவளி, நவம்பர் 19 குருநானக் பிறந்த நாள், டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஆகிய தேதிகளில் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அஞ்சல் அலுவலகம் இயங்காது. அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த நாள்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.