கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.