தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.