விடுதியில் இருந்து மாயமான கல்லூரி மாணவி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவி ராஜா(21) என்பவர் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவி ராஜாவுக்கும், 17 வயதான கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்த மாணவி திடீரென காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சீவி ராஜா மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் மாணவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்த சஞ்சீவி ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு ஆலம்பாடியில் இருக்கும் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *