“விடுதலை” படப்பிடிப்பில் விபத்து…. சண்டை கலைஞர் பரிதாப பலி…. அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…..!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா அவர்கள் இசை அமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், சென்ற 3ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இந்த பட தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் வெளியிட்ட அறிக்கையில் “சண்டை கலைஞர் சுரேஷ் சூட்டிங்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்தது மிகப் பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. சூட்டிங் தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப் பெரிய இழப்பு. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.