விடிய விடிய போன் பேசிய மனைவி…. கண்டித்த கணவன்…. ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்…..!!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடியில், பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் பாரிஸ் நகரில் இலக்கியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பேருந்தில் சென்று வந்த போது பாலமுருகன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் நடந்து வந்ததால் இலக்கியா கணவரை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவரின் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்த பாலமுருகன் சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மேலும் 3 நாட்களுக்கு முன்பு இலக்கியா தான் கொடுத்த புகாரை வாபஸ் செய்துவிட்டு நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். பாலமுருகனும் அதனை ஏற்றுக் கொண்டு அவருடன் வாழ சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இலக்கியா நேற்று முன்தினம் கைப்பேசியில் நள்ளிரவில் வெகுநேரமாக பேசி இருக்கிறார். இதைப் பார்த்த பாலமுருகன் யாரிடம் இந்த நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறில் ஆத்திரமடைந்த இலக்கியா கத்தியால் பாலமுருகனை குத்தியுள்ளார். உடனே அவர் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அவருடைய தாய் ஓடி வந்திருக்கிறார். ஆனால் இலக்கியா  அவரையும் கீழே தள்ளிவிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர். இலக்கியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி இப்போது சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *