அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்.

மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்” என தெரிவித்துள்ளார்.