
மதுரையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இத்தனை வருடங்கள் அண்ணன் தம்பியாக வாழ்ந்து வந்துள்ள நிலையில் திடீரென தற்போது பிரச்சனை வருகிறது என்றால் அரசியல் உள்ளே வந்துள்ளது என்று அர்த்தம். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன்பிறகு விஜய்யை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தவர் விஜயகாந்த். எனவே அவர் எங்க வீட்டு பிள்ளை.
சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நான் விஜயிடமே நேரடியாக தெரிவித்துள்ளேன். அவர் சினிமாவில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் கண்டிப்பாக நாம் அதனை பாராட்ட வேண்டும். அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் அரசியலில் விஜய் சதிக்க வேண்டும் என்றால் நாளுக்கு நாள் நாலு சுவற்றுக்குள் அரசியல் செய்வதை விட்டுவிட்டு வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அவர் பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.