விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் … இணையத்தில் தீயாய் பரவும் மாஸ்டர் பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

‘மாஸ்டர்’ படம்  பொங்கலுக்கு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல போஸ்டர் டிசைனரான கோபி பிரசன்னா விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.