BREAKING : விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ சந்திரசேகர்..!!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்ஏ சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்..

நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்திருந்தார்.. இதுதொடர்பான வழக்கு  சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..

அதில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றும், அந்த இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை ரசிகர்களாக தொடர்வதாக பதில் மனுவில் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *