தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்துவிடம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசியலுக்குள் ஆன்மீகம் இருக்கிறது ஆன்மீகத்திற்குள் அரசியல் இருக்கிறது என்றார். அதன் பிறகு விஜய் குறித்த கேள்விக்கு நான் விஜயை பற்றி பேசி அவருடனான நட்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். அதாவது உண்மையை சொல்லாமல் பொய்யனாக இருக்க விரும்பவில்லை என்றார். மேலும் விஜயின் அரசியல் வருகை பற்றி பேசி அவருடைய நட்பை நான் முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.