விஜய் பட பாணியில்!…. சாப்பிட சென்ற எம்.பி.ஏ. மாணவருக்கு நேர்ந்த கதி?…. வைரல் வீடியோ…..!!!!

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் பசியால் வாடிய ஒரு மாணவர் உணவுக்காக ஒரு திருமண விழாவுக்குள் புகுந்து அங்கு மணமகனிடம் சென்று, உங்களது பெயர் தெரியாது இலவச உணவை சாப்பிடுவதற்காக அரங்கிற்குள் நுழைந்தேன். நான் ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். எனக்கு பசியாக இருந்ததனால் நான் இங்கு சாப்பிடவந்தேன். இதனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையா..?” என தைரியமாக கேட்டுள்ளார். அதை கேட்ட மணமகன், “எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. உன் ஹாஸ்டலுக்கும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து செல்லலாம்” என கூறியுள்ளார்.