விஜய் நடிக்கும் 67-வது படம்…. வெளியான புது அப்டேட்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டிரைக்டு செய்யவுள்ளார். இந்த படம் லலித் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், டிரைக்டர் மிஷ்கின்,  கவுதம் மேனன், அர்ஜூன் போன்றோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரைக்கதை எழுதும் பணிகளை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாகவும், இப்படத்தின் துவக்கவிழா மற்றும் பூஜை வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.