விஜய் தேவர்கோண்டா புகைப்படம் வெளியிட்டு சமந்தா சொன்ன குட் நியூஸ்!!

சமீபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வருபவர்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின்னர் சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வரும் நிலையில் அவர் நடித்த சகுந்தலம் திரைப்படம் ரிலீஸ் இயக்கு தயாராக இருக்கிறது. அடுத்ததாக சமந்தா குஷி என்ற திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரொமான்டிக் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியாக திட்டமிட்டுள்ள இந்த படம் சமந்தாவிற்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட்டதால் தள்ளிப்போனது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .அதன்படி வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கரம் பிடித்தபடி இருப்பது அனைத்து நெட்டின்களிடையேயும் கவனம் ஈர்த்து வருகிறது.