விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின்….. வெளியான மாஸ் அப்டேட்…. உடனே பாருங்க….!!!!

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக பெண் ரசிகர்களை அடித்துக்கொள்ள முடியாது. இவர் தற்போது பூரி ஜெயகாந்தன் இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ளார். இவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். சமீபத்தில் மைக் டைசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு லைகர் பட குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதனைதொடர்ந்து இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி, தமிழ், தெலுங்கு, என பழமொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் முதல் பாடல் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *