தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ‌ நடிகருமான விஜய்யை திருநெல்வேலி சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன் மகனாக நினைத்து இவ்வளவு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து அந்த மூதாட்டி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் என்றைக்கு இளம் வயதில் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி படத்தை முதலில் பார்த்தேனோ அது முதலில் விஜய் என் மகனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் நான் விஜயை என்னுடைய மூத்த மகனாக கருதுகிறேன். எனக்கு விஜய்யை நேரில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கிறது.

நான் திரையில் தான் அவரைப் பார்த்துள்ளேன். என் மகனை பற்றி யாராவது தவறாக பேசினால் நான் தன் அவர்களிடம் விஜய் கண்டிப்பாக ஜெயித்து விடுவார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுவேன். நான் விஜயின் கல்யாண படத்தை அந்த காலத்தில் அம்பையில் வாங்கினேன். அதை தற்போதும் என்னுடைய வீட்டில் மாட்டி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் விஜயை தன் மகனாக நினைத்து வெள்ளியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வரும் நிலையில் அவரை பார்க்க முடியாத வருத்தம் தனக்கு இருப்பதாகவும் நீண்ட நாட்கள் எனக்கு வாழ வேண்டும் என்ற ஆசை கிடையாது எனவும் என் மகன்கள் இருவரும் தற்போது நன்றாக இருப்பதாகவும் கூறினார்.