கோலிவுட் சினிமா வட்டாரத்தில் புது படங்களின் வருகையை தாண்டி ரீரிலீஸ் படங்களின் வருகை அதிகரித்து உள்ளது. மக்களும் தியேட்டர்களுக்கு பழைய நல்ல படங்களை பார்ப்பதற்கே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூலை குவித்தது அதைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பிரேமம் உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து உச்சப் பிரபலமான தளபதி அவர்களின் போக்கிரி திரைப்படம் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது மெகா ஹிட் கொடுத்த கில்லி திரைப்படம் மாநிலம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இது தளபதி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்த அஜித் ரசிகர்களும் அவர் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக எழுப்பி வர, அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் அவரது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி தமிழக முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆவது தற்போது உறுதியாகி உள்ளது. இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.