எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விசிக ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசும்போது ஆதவ் திமுகவை நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே தமிழ்நாட்டில் வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர் திமுகவை நேரடியாகவே விமர்சித்து மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் இயக்குனர் அமீர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே நன்மை தராது. ஆதவ் அர்ஜுனா நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல. பிறப்பாலும் பணக்காரர்களின் வாரிசுகளை மணப்பதாலும் ஒருவரால் பணக்காரராக முடியும். ஆனால் மக்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் முதல்வராக முடியாது என தெரிவித்துள்ளார்.