தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாக்டர், மாவீரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் அவரை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோன்று சிவகார்த்திகேயனின் சம்பளமும் வெகுவாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்பிரமணியம் சிவகார்த்திகேயன் குறித்து கூறுகையில், “சில வருடங்களுக்கு முன்பே ரஜினி, கமல், விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று கூறினேன்.
அப்போது என்னை கிண்டல் செய்து நான் சிவகார்த்திகேயனின் ஜால்ரா என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இப்போது நான் சொன்னது போன்று நடந்து விட்டது. விஜய் மற்றும் அஜித் படங்களைப் போன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது” என கூறியுள்ளார்.