விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்… வசூலில் பட்டைய கிளப்பும் ‘டாக்டர்’…!!!

டாக்டர் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இந்த படத்தைக் காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டாக்டர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஷங்கர் டாக்டர் படம் குறித்து பதிவிட்டிருந்தார்.

It's official: Sivakarthikeyan's 'Doctor' to release in October | Tamil  Movie News - Times of India

தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ஆஸ்திரேலியாவில் $20K , அமெரிக்காவில் $135K வசூல் செய்துள்ளது. மேலும் டாக்டர் படம் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் அமெரிக்காவில் $130K வசூல் செய்திருந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அதனை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *