பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது . சமீபத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்ததால் படங்கள் வெளியானது.

ஆனால் மக்கள் கூட்டம் இல்லாததால் பல பகுதிகளில் திரையரங்குகளை மூடி வருகின்றனர் . இதனால் சில தயாரிப்பாளர்கள் படங்களை ஒடிடி தளத்தில் வெளியிட்டனர். மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் அதனை படக்குழு மறுத்தது. மேலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில்தான் மாஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.