“விஜய்க்கு பீஸ்ட் படத்தில் ஒரே ஒரு காஸ்டியூம் தான்”… பேட்டியில் கூறிய நெல்சன்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களை நெல்சன் மற்றும் பூஜா ஹெக்டே பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே மற்றும் நெல்சன் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜாவுடன் பீஸ்ட் படம் குறித்து கலந்துரையாடினார்கள். அப்போது நெல்சன் பேசியபோது விஜய் இந்த படத்தில் கதையை சொன்ன உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் கதையை நம்புவதாக கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதாகவும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்டியூம் மட்டுமே என கூறியுள்ளார்.

ஹீரோயின் பூஜா ஹெக்டே பேசியபோது நெல்சன் மட்டும் தான் தினமும் வேறு வேறு காஸ்ட்யூமில் வருவார் எனவும் 20 நாள் ஷூட்டிங்கும் ஒரே மாதிரி இருந்ததாகவும் அனைவருக்கும் நாங்கள் ஒரே காஸ்டியூம் தான் என கூறியுள்ளார். தில் ராஜு பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் மீதுள்ள நம்பிக்கையில் தான் தெலுங்கு மொழியில் வாங்க உள்ளதாக கூறியுள்ளார்.