திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சியின் மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, நாங்கள் 2026 தேர்தலை முன்வைத்த மாவட்டம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குற்றங்களை தடுப்பது போல தெரியவில்லை. சீமான் யாரோடு பேசுகிறார். எங்கு செல்கிறார் என கண்காணிக்கும் அரசு குற்றங்களை தடுக்க முன்வரவில்லை.
60 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சிகள் மழை வெள்ளத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணவில்லை. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மழை வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று நிற்க முடியாது. அவர் ஏனென்றால் அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வரவழைத்து நிவாரணம் கொடுத்துள்ளார்.
விஜய் நிவாரணம் கொடுப்பதை வரவேற்கிறேன். விஜய்க்கு பாதிக்கப்பட்டவரை நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு கொடுக்க மறுப்பது குறித்த கேள்விக்கு சீமான் கூறியதாவது, ஒன்றிய அரசே உங்க அரசு தான். உங்க சம்பந்தி அரசுதான். எந்த நேரமும் பாஜக அமைச்சர், பிரதமரை பார்க்க முடிகிறது. பேச முடிகிறது. அப்படி இருக்கும்போது அவர்களிடம் பேசி நிவாரணத்தை வாங்கி தர வேண்டியதுதானே என திமுகவை விமர்சித்து பேசினார்.