தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைந்தார். அரசியலில் தட்டு தடுமாறி நின்ற நிலையில் இவரது உடல்நிலை சரியில்லாமல் போக அவரது மனைவி கட்சியை பார்த்து வந்தார். இறுதியாக உடல்நிலை மோசம் அடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த விஜயகாந்த் மரணத்திற்கு முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் பதவியை தனது மனைவி பிரேமலதாவுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் விஜயகாந்த் நல்ல உடல் நிலையோடு உயிருடன் இருந்திருந்தால் தமிழக அரசியலே திசை மாறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி போட்டியிட்டதை நினைவு கூர்ந்தார். கல்லூரி படிக்கும் போது விஜயகாந்த் படங்களை விரும்பி பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.