ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆலையின்  இரும்பு உருகும் கடை-2 ல் திரவ இரும்பு பொருள் வெடித்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் இது  விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.