‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்… தெறி மாஸ் அப்டேட் இதோ…!!!

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர். மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தான் அதன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர்.

இதில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும் நடிக்க உள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ், டி-சீரிஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *