“விக்ரம் ப்ளாக் பஸ்டர் சினிமா”…. பிரபல தெலுங்கு சினிமா நடிகர் டுவிட் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3 ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “விக்ரம் ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். இது சிறப்பான படைப்பு. விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடைபெறுகிறது. இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை, உங்களுடைய பெஸ்ட் இது. இறுதியாக கமலஹாசன் அவர்களின் உழைப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகவல் இல்லை. நான் உங்களை மிகப்பெரிய ரசிகனான எனக்கு இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கு” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *