விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்ட ரகசியம்… ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இவர் தான்…!!!

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பாவக் கதைகள்’ . இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலி, கல்கி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நரிக்குட்டி என்ற வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

‘உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாபர் சாதிக் என்பவர் நரிக்குட்டி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவரின் பெயரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தேனி ஈஸ்வரன் தான் நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.