நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அவர்களுக்கு தனியார் விடுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை கௌதம் மேனன் இயக்கியிருப்பதாகவும், நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வீடியோ வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் எதுவும் வெளியாகவில்லை.