விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முத்தமிழ் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதனைப் போல பாஜக கூட்டணியில் உள்ள பாமக இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தால் பாஜக போட்டியிடாது. நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறது.