வாழ்க தமிழ்நாடு…! வாழ்க பாரதம்…! குடியரசு தினவிழாவில் ஆளுநர் ரவி அதிரடி ஸ்பீச்….!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள
காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். அங்கு தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் ‌ இன்று கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி பேசினார். அவர் பேசியதாவது, நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் நன்றியோடு இன்று நினைவு கூர்வோம். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியல் அமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி சொல்லுவோம்.

அதன் பிறகு ருக்மணி, லட்சுமிபதி, அஞ்சலையம்மாள், குயிலி, வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். நாம் நன்றியோடு வீரர்களை நினைவு கூர்வோம். இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக திகழும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கைத் தமிழர் நலனுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் அவர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவைகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. மேலும் இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவி செய்கிறது. வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் என்று கூறினார்.