வாழ்க்கைக்கு… உபயோகம் அளிக்கும்… வழிகள் இதோ…!!!

வாழ்க்கைக்கு தேவையான விதிகள்:

ஆண்டவரே உங்கள் கடவுள்! வேறு யாரும் ஆண்டவரல்லர்! எனவே நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடு அன்பு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு நகரின்முற்றுகையிடுகையில்   கனிதரும் மரங்களை வெட்டலாகாது. கனிகளை  நீங்கள் உண்ணலாம் .ஆனால் மரங்களை வெட்டி  வீழ்த்தலாகாது .

விதைவைகளையும் அனாதைகளுக்கும் தீங்கு செய்யாதீர்.  நீங்கள் அவர்களைத்  துன்புறுத்தி, அவர்கள் என்னை கூப்பிட்டால், நான் அவர்களை காக்க வருவேன் .

ஒருவரின் எருதோ ஆடோ  வழி தப்பி அலைவதை பார்த்தால், நீங்கள் சும்மாருத்தல்ஆகாது . நீங்கள் அதனை தன் உரிமையாளர்களிடம்  சேர்க்க வேண்டும் .

ஓர் ஏழை உங்களுக்கு வேளை செய்தால்  அவன் ஊதியத்தைக் கொடுக்கக்  காலம் தாழ்த்தாதீர்கள்.   செஅந்த நாளே அவன் ஊதியத்தைகொடுத்து  விடுங்கள் .

உங்கள் ஒலிவமரத்தில் இருந்து திராட்சை தோட்டத்தில் இருந்துதோ   முதல் அறுவடை செய்யும்போது மரத்திலும் திராட்சைக் கொடியுலும்   எஞ்சியவற்றை ஏழைகளுக்காக விட்டு வையுங்கள்.

உங்கள் நாட்டில் வாழும் அந்நியரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்குள்ள உரிமைகளை அவர்களுக்கும்  கொடுங்கள்.  உங்களை  அன்பு செய்வது போல அவர்களையும் அன்பு செய்யுங்கள். நீங்கள் எகிப்தில் அன்னியராய்   இருந்ததை மறந்து விடாதீர்கள் .ஆண்டவராகிய நானே இதை  உரைத்தேன்.

காது கேளாதவர்களுக்கு எதிராய் அநீதி  சொல்லாதீர்.அவனால் தன்னை காக்க இயலாது. கண் தெரியாதவன் சொல்லும் வழியில் தடைகள் வைக்காதீர். அவன் வழி நேரிடலாம்.

உங்கள் உள்ளத்தில்உங்கள் சகோதரனுக்கு எதிராய்ப்  பகைமை கொள்ளாதீர்கள். மாறாக, சகோதரனை கண்டித்து வையுங்கள். இல்லாவிடில் நீங்கள் குற்றபழிக்கு முற்படுவீர்கள் பழி வாங்காதீர்கள்; யாருக்கும் எதிராக வஞ்சினம் வைக்காதீர்கள்  உங்களைப்போல் அயலாரையும் நேசியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *