வாழைப்பூ மருத்துவ குணங்கள் …!

உணவே மருந்து பகுதியில் இன்று வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். அறிய மருத்துவக்குணங்கள் உள்ள வாழைப்பூவை சித்தர்கள் கூறியது போல உணவே மருந்து என உணர்ந்து உண்வோம் நூற்றாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம் :

வாழைப்பூவில் வைட்டமின்கள், பிளவோனோய்ட்ஸ், புரோட்டீன் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை மருத்துவகுணம் கொண்டுள்ளதால் நோயாளிகள் வாழைப்பூவை தொடர்ந்து உண்டுவர நோய் வெகு விரைவில் குணமாகும். பாரம்பரிய மருத்துவத்தில் நாள்பட்ட ஆஸ்துமா, தீராத நெஞ்சு வலி, சளி , மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள்  திற வாழைப்பூ அருமருந்தாக பயன்படுகிறது. வாழைப்பூவை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும். இன்றைய உணவு பழக்கத்தாலும், வேலை வலுவாலும்,  மன உளைச்சல் ஏற்பட்டு அசீரணக்கோளாறு உண்டாகிறது.

இதனால் வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் போன்ற நோய்கள் உண்டாகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் ஆறும் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.வாழைப்பூசிதவேதியை கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தை நீக்கும். மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் உள்மூலம், வெளிமூலம், புண்களுக்கு  நல்ல தீர்வாக வாழைப்பூ இருக்கிறது. வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம், போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. முக்கியமாக பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிதரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூ அருமருந்தாக உள்ளது .

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு தணியும். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். கை, கால், எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை, கால், எரிச்சல், உள்ள  பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால், எரிச்சல், நீங்கும்.  இத்தனை அறிய மருத்துவக்குணங்கள் உள்ள வாழைப்பூவை சித்தர்கள் கூறியது போல உணவே மருந்து என உணர்ந்து உண்வோம் நூற்றாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *