வாளி தண்ணீரில் தலைகீழாக கிடந்த குழந்தை…. அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரிஜோத் பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ரோஜா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டு வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது குளியல் அறையில் இருந்த வாளி தண்ணீரில் குழந்தை தலைகீழாக கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வாளி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி உள்ளே விழுந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.