வாலிபருக்கு ஏற்பட்ட காதல்…. பாட்டியுடன் நடந்த நிச்சயதார்த்தம்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

24 வயதுடைய வாலிபர் ஒருவர் 61 வயதுடைய பெண்மணியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதியில் Dairy Queen என்ற ஒரு உணவகம் அமைந்துள்ளது.  இந்த உணவகத்திற்கு Quran McCain என்ற 24 வயதுடைய வாலிபர் உணவருந்த வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த உணவகத்திற்கு Cheryl McGregor என்ற 61 வயதுடைய பெண்மணியும் வருவது வழக்கம். மேலும் இந்த உணவகத்தின் மேலாளர் Cheryl McGregor மகன்  Chris ஆவார். அதனால் Cheryl McGregor அடிக்கடி உணவகத்திற்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து கொண்டிருக்கும்போது Quran என்ற வாலிபருக்கும் Cheryl என்ற வயதான பெண்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த வருடம் வரை நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமுகதளவாசிகள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை காரணம் காட்டி சில மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் போடும் வீடியோ பலரையும் வெறுக்கதக்க வகையில் உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து Quran McCain என்ற வாலிபர் கூறுகையில் “எங்களுடைய வயது வித்யாசத்தை காரணம் காட்டி பலர் வெறுக்கும் வகையில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் நினைத்து நாங்கள் கவலைபட மாட்டோம். Cheryl McGregor தான் என்னுடைய ஆவி, ஆன்மா மற்றும் இரக்கமுடையவர். நான் இவரை பணத்திற்காக காதலிக்கவில்லை. மேலும் நான் இவரை விட்டுகொடுக்க மாட்டேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *