தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் என அனைத்துமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் நேற்று இரவு படம் பார்க்க சென்றதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் வாரிசு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். இதற்காக நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தியேட்டருக்கு சென்றுள்ளனர். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக படம் திரையிடப்பட்டதாம். வந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்பதற்காக நடிகர் விஜய் அமைதியாக படத்தை பார்த்துவிட்டு கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி சென்றதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தன்னுடைய காதல் மனைவியுடன் சேர்ந்து வாரிசு படத்தை பார்ப்பதற்கு நடிகர் விஜய் சென்றார் என்ற தற்போது வைரல் ஆகி வருகிறது.