தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதன் பிறகு வாரிசு படம் ரிலீஸ் ஆன 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு தமிழகத்தில் மட்டும் வாரிசு திரைப்படம் 150 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் துணிவு திரைப்படத்தின் வசூல் விபரத்தை போனி கபூர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் வசூல் என்ன என்று கேட்டு வருகிறார்கள்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்  திருப்பூர் சுப்ரமணியன் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதோடு என்னுடைய தியேட்டரில் வாரிசு திரைப்படம் ரூ. 63,79,933, துணிவு படம் ரூ. 64,40,839 வசூலித்துள்ளது. இரண்டு படங்களுக்கும் வெறும் 60 ஆயிரம் தான் வித்தியாசம் என்று கூறியுள்ளார். மேலும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் உண்மையில் சமமாக தான் வசூல் சாதனை புரிந்துள்ளதாகவே திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.