வாரத்தில் 2 முறை வாழைப் பூ சாப்பிடுங்க… எந்த நோயுமே அண்டாது… அவ்வளவு நல்லது…!!!

வாரத்தில் இரண்டு முறை வாழைப்பூ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி உடலில் உள்ள பல நோய்களுக்கு வாழைப்பூ அருமருந்தாக அமைகிறது. இதனை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை சரியாகும். மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும். ரத்தசோகையை குணமாக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். அல்சர் பிரச்சனைகளை சரிசெய்யும். சிறுநீரக கல்லடைப்பு சரி செய்யும். கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.