இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியா உணவு உற்பத்தியில் உபரி தேசமாக திகழ்வதாகவும் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்புக்கு தீர்வு காண இந்தியா செயலாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இப்படி வாய் பூசாமல் பொய் பேசும் ஒரு பிரதமரை உலகம் அநேகமாக இதுவரை கண்டிருக்காது.
உணவு உற்பத்தியில் உபரி உள்ளது என்றால் பசி, ஊட்டச்சத்து குறைபாடு, சிசு மரணம் மற்றும் ரத்த சோகை ஏன் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் மாநிலங்களவையில் பேசிய பிரதமர் உணவு உற்பத்தியில் இந்தியா உபரிதேசமாக திகழ்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.