வாய்ப்பு கிடைத்தால் உதயநிதியுடன் நடிப்பேன்… நடிகர் வடிவேலு!!

வாய்ப்பு கிடைத்தால் உதயநிதியுடன் கண்டிப்பாக நடிப்பேன் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்..

23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து வந்தார்..

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டை  நீக்குவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று அவர் கூறினார்.

ரெட் கார்டை  நீக்குவதாக முன்னதாக அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி கொரோனா நிதியாக 5 லட்சம் ரூபாயை கொடுத்திருந்தார்.. தற்போது அவர் லைகா நிறுவனம் சார்பில் 5 படங்களில் நடிக்க இருக்கிறார்.. முதல் கட்டமாக இந்த மாதம் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் ஹீரோவாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்..

இந்த நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு உருக்கமாக பேசினார்.. அவர் பேசியதாவது, என்ன சொல்வது என்று தெரியவில்லை; இதுபோன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க முடியாது, வைகைப் புயல் என்று என்னை சொல்வார்கள், என் வாழ்வில் நான் சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன்.. கொரோனாவுக்கு முன் எனது பிரச்சனை எல்லாம் சாதாரணமாக சென்று விட்டது..

மக்களை இன்னும் சந்தோசமாக சிரிக்க வைத்து இந்த உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும். விவேக் எனக்கு அருமையான நண்பன்.. அவரது இறப்பு பெரும் வேதனையை தந்தது. விவேக் மறைவு நாட்டிற்கும் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளே காரணம்; எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்த பிறகு எனது வாழ்க்கை பிரகாசமாக மாறிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால் உதயநிதியுடன் கண்டிப்பாக நடிப்பேன்.. தற்போது தனக்கு எல்லாம் நல்லதே நடந்து வருகிறது என்றார்..

மேலும் அவர், 4 ஆண்டு காலம் நடிக்காமல் இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலை பாடி, எனக்கு எண்டே கிடையாது, இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்  என பதிலளித்தார்.. இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ, நடிக்க வாய்ப்பே இல்லை, அந்த பக்கமே செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *