வாயால வட சுட்டு இப்படி செஞ்சிட்டு போயிட்டாரு…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் மூதாட்டியிடம் மர்ம நபர் சாதூர்யமாக பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் புதூரில் 70 வயதான கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியே செல்வதற்காக முத்துராமலிங்கபுரம் நகரில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் சாதுர்யமாகப் பேசியுள்ளார். அதாவது மர்மநபர் தன்னை காவல்துறை அதிகாரி என்று மூதாட்டியிடம் அறிமுக படுத்திக் கொண்டார். இதனையடுத்து அவர் இப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதால் கழுத்தில் நகையிணை இவ்வாறு போட்டுக் கொண்டு செல்லாதீர்கள் என்றுள்ளார்.

அதன்பின் மூதாட்டியிடம் நகையை என்னிடம் கொடுங்கள் பேப்பரில் மடக்கி வைத்து தருகிறேன் என்று கூறி அதில் கல்லை வைத்து கொடுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின் பேப்பரை பார்த்த மூதாட்டி அதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மூதாட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.