வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இவர் நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய அவரை கௌரவிக்கும் வகையில் காவல்துறையின் மரியாதை உடன் உடல் அடக்கம் செய்ய டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.