வாட்ஸ் அப் குரூப்பில் அட்டகாசமான அம்சம்…. இனி யாரும் அனுமதியில்லாமல் உள்ளே நுழைய முடியாது….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் வாட்ஸ் அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது whatsapp குரூப்பில் புதிதாக ஒருவர் உள்நுழைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மினிஸ்ட்ரேட்டர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே புதிய உறுப்பினர் உள்நுழைய முடியும்.

இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப் மேலும் பாதுகாப்பான முறையில் இருக்கும். அது மட்டுமல்லாமல் புதிய நபர்கள் எளிதில் whatsapp குரூப்பில் இணைவதை தடுப்பதுடன் நம்பகமான நபர்களை வாட்ஸ் அப் குரூப்பில் இணைப்பதையும் உறுதி செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.