உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக புதிய அப்டேட் கொண்டு வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ

து குறித்து வாட்ஸ் அப்பின் பீட்டா வெளியிட்டு இருக்கும் செய்தியில், ஒரு பயனர் தனது whatsapp பயன்படுத்தும் முதன்மை சாதனங்களில் மட்டுமல்லாமல் அது டெக்ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இணைக்கப்பட்டு இருந்தாலும், அதிலும் சில அரட்டைகளை லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை கொண்டு வர பணியாற்றி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.