உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் பிரைவசி தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது chat lock என்ற புதிய அம்சம் கவனம் ஈர்த்துள்ளது. யாருடைய சாட்டை மறைத்து வைக்க விரும்புகிறீர்களோ, அவர்களின் ப்ரொபைலுக்கு செல்ல வேண்டும். அதில் சாட்லாக் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு அந்த நபருக்கு நீங்கள் செய்யும் chat மறைமுகமாக இருக்கும். இந்த சாட்டை அன்லாக் செய்தால் மட்டுமே பார்க்கவோ அல்லது மெசேஜ் அனுப்பவும் முடியும். இந்த புதிய அம்சம் whatsapp மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.