உலகிலுள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் அதிகளவில் புது அப்டேட்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக மிகவும் சிறிய அளவிலான கோப்புகளை மட்டுமே பகிர முடிந்தது. இப்போது அதிகபட்சம் 2gp வரையிலான கோப்புகளை பகிரலாம். அதிலும் குறிப்பாக அதிக அளவிலான உறுப்பினர்களை கொண்ட குழுவின் செய்திகளை Mute செய்துகொள்ளவும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதியதாக உங்களது வாட்ஸ்அப் சாட்டில் அதிகபட்சமாக 5 Contact-களை PIN செய்துகொள்ள முடியும். இதற்கு முன்பாக வாட்ஸ்அப்-ல் 3 chat-களை மட்டுமே PIN செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கையானது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புது அப்டேட்டின் வாயிலாக முக்கியமான குரூப்களிலிருந்து வரும் செய்திகளை தவறவிடாமல் படித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.