வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. தெலுங்கானாவில் 4 பேர் பலியான சோகம்…!!!

நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கானா மாநிலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அதிகபட்ச வெப்பநிலை நல்கொண்டா மாவட்டம் தாமராசர்லா மற்றும் ஜகித்யாலா மாவட்டம் ராகவ்பேட்டையில் 44.3 டிகிரியாக பதிவானது. கடும் வெயிலால் மக்கள் உயிர் இழக்கின்றனர்.

கோதாவரிகாவை சேர்ந்த ஏ.ஆர்.கான்ஸ்டபிள் மதுகுமார், கம்மம் மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு பணியாளர் சுனிதா, ஜகித்யாவில் மல்லவ்வா, பத்ராத்திரியில் விவசாயி ஸ்ரீராமுலு ஆகியோர் நேற்று வெயில் பாதிப்பால் உயிரிழந்தனர். நாடு முழுவதும் வெப்ப நிலை படிப்படியாக குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply