இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து தற்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வங்கி கணக்கிலிருந்து 147.50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை தற்போது எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு பராமரிப்புக்காக எஸ்பிஐ வங்கி கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏடிஎம், டெபிட் கார்டு பராமரிப்புக்காக வருடத்திற்கு 125 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தை சேர்த்து 147.50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டை மாற்றும் போது அதற்கு கட்டணமாக ரூபாய் 300 ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.