வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சந்தன மரங்கள் பதுக்கியதாக கூறி நடத்தப்பட்ட சோதனையின் போது பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 269 அதிகாரிகளுக்கு 2011ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.